Tuesday, October 8, 2013

கொண்டு போனது என்ன?

கொண்டு போனது என்ன?

மாவீரன் அலெக்ஸாண்டர் ஒரு முறை தன் தளபதிகளிடம் சொன்னான்:

''இறுதி காலத்தில் என் சவப் பெட்டியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, என் இரு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு செல்லுங்கள்!''

''ஏன்?'' என தளபதிகள் கேட்டனர்.

அதற்கு அலெக்ஸாண்டர், ''ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் எண்ணற்ற நாடுகளைக் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய மாவீரன் அலெக்ஸாண்டர், இறுதியில் எதையுமே எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகம் புரிந்து கொள்வதற்காகத்தான்!'' என்று பதிலளித்தார்.

'அனைத்துக்கும் ஆசைப்பட்டாலும் இறுதி வரை எதுவும் கூட வராது' என்று தான் உணர்ந்து கொண்ட உண்மையை இந்த உலகுக்குத் தெரியப்படுத்தவே அப்படிச் செய்தான் அலெக்ஸாண்டர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.