The Best Law Firm in Chennai Tamil Nadu India

COMPANY LAW FIRM ADVOCATES,CRIMINAL LAWYERS,CIVIL & PROPERTY ATTORNEYS

Fashion Designing Institute

GREEN ORGANICS FOOD EXPORTER

Tamil Siragugal|Tamil News Channel Online

Thursday, September 4, 2014

ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

தனது சகோதரர்கள் எதிர்காலத்தை குறித்து என்ன திட்டமிடுகின்றனர் என்பதை எப்போதும் கட்டியம் கூறுபவர் பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்ட அவரது வார்த்தைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

கோத்தாபயவின் ஆதரவாளரான றொகான் குணரட்ன தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்குள் அனுமதித்ததற்காக அரசாங்கத்தை சாடியதை மறந்துவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்தத் தவறு சரிசெய்யப்படலாம். தமிழ் தேசிய கூட்டமைபு தடை செய்யப்படலாம். பயங்கரவாதச் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கப்படலாம்.

ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ராஜபக்சேக்கள் தங்களுடைய குடும்ப ஆட்சிக்கும் பரம்பரை ஆட்சிக்கும் உள்ள சகல விதமான எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களையும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஈவிரக்கம் இன்றி அடக்கி ஒடுக்குவார்கள்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகுவை; கடுமையாக விமர்சிக்கும் தீவிர சியோனிஸ்ட்கள் அவரை இன்னொரு நாட்டை பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். அந்த நாடு இலங்கை. படைபலத்தை உறுதியான விதத்தில் பயன்படுத்துவதன் மூலமாக ஹமாசிற்கு மீளமுடியாத தோல்வியை எப்படி வழங்குவது என்பதை இலங்கையிடம் கற்குமாறு அவர்கள் கோருகின்றனர்.
நக்பாமா முதல் இஸ்ரேல் தொடுத்த போர்கள் ஒவ்வொன்றும் வெற்றியில் முடிவடைந்துள்ளன. ஆனால் பாலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வு காணமுடியாமலுள்ளது. அது எமது உயிர்களை, நம்பிக்கைகளை, எமது மனிதாபிமானத்தை சிதைக்கிறது என சர்வதேச புகழ்வாய்ந்த இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் குரொஸ்மன் கடந்த வாரம் கவலை வெளியிட்டார்.
இதன் மூலமாக கற்க வேண்டிய பாடம் மிக தெளிவானது. இராணுவ வெற்றிகள் சாத்தியமானவை, இராணுவ தீர்வுகள் ஒருபோதும் சாத்தியமானவை அல்ல(வெற்றிகரமான இனப்படுகொலைகளை புரிந்தால் மட்டுமே அவையும் இன்றைய உலகில் சாத்தியமில்லை).
இராணுவமயமாக்கல் என்ற விசயத்தில் இஸ்ரேல் முதலாவதாக உள்ளது. அது தான் பயங்கரவாதிகள் என தான் கருதுவோர்கள் குறித்து சிறிதும் ஈவிரக்கமற்ற ஒரு கொள்கையை பின்பற்றுகிறது. ஆதற்கு அமெரிக்காவின் என்றும் குறைவடையாத ஆதரவு உள்ளது. எனினும் சமாதானமும் அமைதியும் அந்த நாட்டிற்கு சாத்தியப்படவில்லை. பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத வரை அது சாத்தியமில்லை.
ராஜபக்சாக்கள் இஸ்ரேலின் தந்திரோபாயத் தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்று வேறு வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 5 வருடத்திற்குப் பின்னரும் சந்தேகம் வெறுப்புனர்வு ஐக்கியமின்மை போன்றவை காணப்படுகின்றன. புதிய மோதல்கள் உருவாவதற்கான விதைகள் வீசப்படக் கூடிய நச்சு நிலமாக நாடு காணப்படுகிறது.
இலங்கையும் இஸ்ரேலும் எப்படி யுத்தத்தில் ஈடுபடக் கூடாது சமாதானத்தை எப்படி கட்டி எழுப்பக் கூடாது என்ற விசயங்களில் ஒருவரிடம் இருந்து ஒருவர் பாடம் கற்க வேண்டும்.
சியோனிஸ்டுகள் போன்று ஆளும் குடும்பத்தினரும் இனப் பிரச்சனை ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இலங்கையை சிங்கள பௌத்தர்களின் புனித நாடாக கருதுகின்றனர். சிறுபான்மையினரின் துயரங்களை நியாபுர்வமற்றவையாக, ஏற்றுக் கொள்ள முடியாதவையாக கருதுகின்றனர். சிறுபான்மை விவகாரங்களை பொலிஸ் இராணுவத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பு விவகாரங்களாக அவர்கள் கருதுகின்றனர்.
13வது திருத்தம் அதன் உண்மையான வடிவத்தை இழந்த பின்னரும் உயிர்வாழ்வதற்கு காரணம், அரசியல் தீர்வு அவசியம் என ராஜபக்சாக்கள் கருதுவதால் அல்ல, மாறாக இந்தியாவை சீற்றத்திற்குள்ளாக்க விரும்பாததே அதற்கு காரணம். உள்ளுர் தீர்வுகளை தயாரிக்கும் முயற்கள் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் செயற்படும் நெருக்கடியான நடவடிக்கைகளுக்கான நிலையத்தின் பிரிசிம் இதழில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே தனது உலகப்பார்வையை முன்வைத்துள்ளார்.
தனது சகோதரர்கள் எதிர்காலத்தை குறித்து என்ன திட்டமிடுகின்றனர் என்பதை எப்போதும் கட்டியம் கூறுபவர் பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்ட அவரது வார்த்தைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன.
கோத்தாபயவின் கொள்கை
இலங்கை கடந்த காலங்களிலிருந்து பாடங்களை கற்று மீண்டும் அந்த தவறுகள் நிகழ்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் கோத்தாபய. நிராகரிக்க முடியாத உண்மை, ஆனால் அனைத்தும் நீங்கள் வரலாற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விசயங்கள். கோத்தாபயவை பொறுத்த வரையில் கடந்த காலம் என்பது-சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தையோ, தரப்படுத்தலையோ அல்லது ஏனைய சிங்கள் உயர்குலத்தின் அதீத நடவடிக்கைகளையோ உள்ளடக்கியது அல்ல. அவரை பொறுத்தவரை ஈழ யுத்தத்திற்கு அரசியல் காரணங்கள் எதுவும்இல்லை, பிரிவினைவாதத்திற்கான தமிழர்களின் விருப்பே ஓரே காரணம்.
இவ்வாறான கருத்து அவரிடம் காணப்படுவதை கருத்தில் கொண்டால் எதிர்காலம் கடுமையான சட்டங்கள், அதிகளவு இராணுவமயப்படுத்தல், அதிகளவு ஒடுக்குமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக காணப்படப்போகின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.
இலங்கை எதிர்கொள்ளும் பல பாதுகாப்பு பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;
"மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க கூடிய சாத்தியக்கூறுகள்’’ - உண்மையான இலக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும், ஏனைய ஜனநாயக தமிழர்களும்.
விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரிவிடமிருந்தும்,வெளிநாடுகளிலுள்ள அவர்களுடைய ஆதரவாளர்களிடமிருந்தும் நிதிகளை பெறும் அமைப்புகள் உள்ளன. அவர்கள் ஜனநாயமுகமூடியை அணிந்திருந்தாலும் அவர்களுடைய கருத்துக்கள் தீவிரவாத பிரிவினைவாத கொள்கை இன்னமும் காணாமல் போய்விடவில்லை என்பதையே புலப்படுத்துகின்றது. இலங்கையை பிரிப்பதே அவர்களுடைய இறுதி நோக்கம். பிரிவினைவாதத்தின் பெயரால் சில தீவிரவாத சக்திகள் மீண்டும் துணிச்சல் பெற்று ஆயுதம் ஏந்தலாம் என்பதையே அவர்களுடைய பேச்சுக்களும் செயற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. இது மிக தீவிரமாக எடுக்க வேண்டிய தேசத்திற்கான பெரிய அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபயவின் ஆதரவாளரான றொகான் குணரட்ன தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்குள் அனுமதித்ததற்காக அரசாங்கத்தை சாடியதை மறந்துவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்தத் தவறு சரிசெய்யப்படலாம். தமிழ் தேசிய கூட்டமைபு தடை செய்யப்படலாம். பயங்கரவாதச் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கப்படலாம்.
ஏனைய தீவிரவாத குழுக்களின் எழுச்சி - இலக்குகள் ஜே.வி.பி. யும் ஏனையவர்களும்.
கடந்த கால கிளர்ச்சிகளில் நாம் எதிர் கொண்ட குழுக்களின் எச்சங்கள் உள்ளன. சிலர் இடது சாரிக் கொள்கைகளுக்காக மக்களை மீண்டும் ஆயுதம் ஏந்த தூண்ட முயல்கின்றனர். இவர்கள் சிலர் விடுதலைப் புலிகளின் முகவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாணவர்களை தீவிரவாதமயப்படுத்தி அவர்களை வீதியில் இறங்கச் செய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனது என கோத்தாபய எழுதி உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அரசியல்வாதிகள் தொழிற் சங்கங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றை இலக்குவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதை ஊகிக்க முடிகின்றது.
ஐ.தே.க. இன் தீவிர உறுப்பினர்களும் பழிவாங்கப்படலாம். ராஜபக்சேவுக்கு சார்பான எதிர்க்கட்சிகள் மாத்திரம் அனுமதிக்கப்படலாம்.
மோசமடைந்து வரும் இன உணர்வுகளும் மத ரீதியான வன்முறைகளும் - உண்மையான இலக்கு முஸ்லிம்கள்
இனக்குழுக்களிடையே மதவாதம் தலைதூக்குவதே யுத்தத்திற்கு பிந்திய இலங்கையின் கரிசனைக்குரிய விசயமாக உள்ளது. அதற்கு தீர்வு காணவிட்டால் எதிர்காலத்தில் இன ரீதியான பதட்ட நிலை தலைதூக்கலாம் யுத்த காலத்தின் விடுதலைப்புலிகளால் முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டனர்,இதன் பின்னர் அவர்களை தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்யத் தொடங்கினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் இந்த குழுக்கள் தற்பாதுகாப்பு என்ற நிலையிலிருந்து விலகி சென்று செயற்படத்தொடங்கியுள்ளன. சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
அமெரிக்காவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்த போலியான கதைகளும் உருவாக்கப்படலாம். பாரம்பரியமற்ற தொழில் நுட்பங்களால் உருவாகும் ஆபத்து சமூக ஊடகங்கள் போன்றவை. உண்மையான இலக்கு ராஜபக்சேவுக்கு எதிரான பிரச்சாரங்கள்.
இறுதியான அச்சுறுத்தல் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் எழுந்துள்ளது. மூக ஊடகங்கள் முகப் புத்தகங்கள் போன்றவை தமது நலன்களுக்காக செயற்படம் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.

ராஜபக்சேக்களின் முடிவு:- 

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவை இல்லாத போதிலும் தற்போதய இறுக்கமான கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. மேலும் வடக்குக் கிழக்கு உட்பட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இராணுவம் நிலை கொண்டிருப்பதும் முக்கியமானது. என கோத்தாபயகுறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ராஜபக்சேக்கள் தங்களுடைய குடும்ப ஆட்சிக்கும் பரம்பரை ஆட்சிக்கும் உள்ள சகல விதமான எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களையும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஈவிரக்கம் இன்றி அ டக்கி ஒடுக்குவார்கள். சுந்தேகம் சகிப்பற்ற தன்மை வெறுப்புடன் கூடிய தேசப் பற்று போன்றவை காரணமாக இலங்கை தனக்குள்ளேயே யுத்தம் செய்யும் சமூகமாக மாறும். ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.