Friday, October 11, 2013

கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி

கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி


கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாதென்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.

""உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''

இதற்கு, ""ஸôரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.

""நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.

""நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.
""இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
""இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.