The Best Law Firm in Chennai Tamil Nadu India

COMPANY LAW FIRM ADVOCATES,CRIMINAL LAWYERS,CIVIL & PROPERTY ATTORNEYS

Fashion Designing Institute

GREEN ORGANICS FOOD EXPORTER

Tamil Siragugal|Tamil News Channel Online

Saturday, September 21, 2013

சாதியை ஒழிப்போம்

ஒரு பத்திரிகை நிருபர் ...

ஒரு கிராமத்திற்கு சென்று சாதியை ஒழிப்போம் என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார் ..
இவர் முதல் ஒரு டீ கடையின் முன் தனது பேட்டியை ஆரம்பித்தார் .அங்கே ஒரு பெரியவரிடம் சாதி என்பது உங்கள் ஊரில் உண்டா என்று நிருபர் கேட்டார் ..?
ஏன் இல்லை இதோ கீழே உட்கார்ந்து டீ குடிப்பவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றார் பெரியவர் ..
நிருபர் எதுவும் பேசாமல் ஊரின் உள்ளே சென்றார் ..அங்கே தம்பதிகள் நடந்து வந்தனர் அவகளிடம் நிருபர் சாதி என்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள் என்று கேட்டார் ..அந்த தம்பதிகள் ஜாதி என்பதை நாங்கள் ஏற்கவில்லை .என் மனைவி கீழ் ஜாதி நான் மேல் ஜாதி என்றார் ..பிறகு நிருபர்ஒரு கேள்வி கேட்டார் ஜாதி என்பது இல்லை என்று சொல்லி விட்டு பிறகு ஏன் கீழ் ஜாதி ,மேல் ஜாதி என்று வாய்க்கூசாமல் சொல்கிறீர்கள் ..அவர்கள் கோபம் அடைந்து சென்றனர் .....
பிறகு நிருபர்அதே கிராமத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார் .அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் ..
அதில் 3 வயது குழந்தையை பார்த்து நிருபர்கேட்டார் நீ என்ன ஜாதி ...?
,
குழந்தைகள் ஜாதி ...
,
இன்னும் 10வருடம் கழித்து ..?
,
சிறுவர்கள் ஜாதி ...?
,
இன்னு ம் 20வருடம் கழித்து ..?
,
இளைஞர்கள் ஜாதி ..
,
உனக்கு திருமணம் முடிந்த பிறகு ..?
,
மனித ஜாதி ...
,
70வயதுக்கு பிறக।
,
முதியோர்கள் ஜாதி ...
,
நீ இறந்த பிறகு ...
,
இறைவன் ஜாதி ...என்று பெருமையுடன் அந்த குழந்தை கூறியது ...
,
நிருபர்யோசித்து ஒரு கேள்வி கேட்டார் ...இந்த ஊர் மக்கள் என்ன ஜாதி ..?
அக்குழந்தை மிருக ஜாதி என்றது ....
இறந்தப் பின் ...?
,
எமன் ஜாதி।என்று சிரித்தது...
,
நிருபர் மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை முத்தமிட்டார்..!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.